Breaking
Thu. Jan 9th, 2025

திருகோணமலை துறை முகம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்காவின் நிதி உதவியூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய நகராக்க திட்டத்துக்கும் வழி வகுக்கும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில்  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து கொண்ட  நகராக்க அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் இன்று (14)  கலந்து கொண்டு நகராக்க திட்ட முன்மொழிவினை அமைச்சரிடத்தில் கையளித்து விட்டு  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்

திருகோணமலை பாரிய நகராக்க திட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கு பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளது நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து திருகோணமலை துறை முகமும் பாரிய அபிவிருத்தி இலக்கை அடையவுள்ளது. இதனால் அழகு மிக்க நகரமாக மாற்றமடையவுள்ளதுடன் இளைஞர்களுக்கான அதிகளவான வாய்ப்புக்களும் கிட்டவுள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் நிதி உதவியூடாக லகூன் சிட்டி என்ற திட்டம் ஊடாக நகரமயமாக்கமும் அபிவிருத்தியும் அடையவுள்ளது. கொழும்பு திருகோணமலைக்கான உயர் பாதை ஒன்றை அமைக்க எதிர்கால முன்மொழிவுகளில் உள்ளது இதனை பொறுப்பு வாய்ந்த அமைச்சர் நடை முறைப்படுத்த வேண்டும்.

அபிவிருத்திகளால் நகராக்கம் இடம் பெறுவதை தான் உட்பட அனைவரும் வரவேற்கிறோம்.
நகர அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் விரைவான நடவடிக்கைகளை எடுத்து துரிதமாக செயற்பட்டால் மக்களுக்கான நகராக்கத்தை இணைக்க முடியும் மேல்மாகாண அபிவிருத்தி என்பது மேல்மாகாண அபிவிருத்தி மட்டுமல்ல மாறாக திருகோணமலை ,வட கிழக்கு உட்பட பல்வேறு மாவட்டங்களும் பாரிய நகராக்கத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது நகர திட்டங்களை எமது மாவட்டத்துக்கும் கொண்டு வரவுள்ளதால் மக்கள் மற்றுமல்ல ஏனைய கைத்தொழில் பேட்டைகள் சுற்றுலா அபிவிருத்தி என பல துறைகள் பொருளாதாரரீதியான முன்னேற்றம் காணும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை நாட்டின் தேசிய அபிவிருத்தியில் எமது மாவட்டமும் பாரிய பங்களிப்பு வழங்கும் இதற்காக தானும் பங்களிப்புச் செய்வேன் என்றார்.

Related Post