Breaking
Fri. Jan 10th, 2025

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட் டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர். எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெறும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டாக்டர். லலித் செனவீர தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டங்கள் தோறும் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் வீட்டுக்கு வீடு சென்று பாவனையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், டிஜிட்டல் பாவனையை மக்கள் மத்தியில் அதிகரிப்பதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொடுப்பதுமே இதன் நோக்கமென்றும் அவர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related Post