Breaking
Sat. Jan 11th, 2025

பங்களாதேஸ், தலைநகர் டாக்காவில் 1,151 பேர் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய செல்பி படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

ஒரே செல்பி படத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது உலக சாதனையாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நொக்கியா தொலைபேசி உற்பத்திகளை மேற்கொள்ளும் மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னெடுத்தது. ‘மைக்ரோசொப்ட் லுமியா பங்களாதேஸ்’ பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பதிவு செய்து கொண்டவர்கள் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படம் சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு முன்பு, ஒஸ்கார் விருது விழாவில் எடுக்கப்பட்ட செல்பி படமே உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும் 30 இலட்சத்திற்கும் அதிகமான ரீட்வீட்டுகளை பெற்றது.

தற்பொது அந்த சாதனையை லுமியாவின் இந்த செல்பி படம் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தச் சாதனையை கின்னஸ் அங்கீகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

selfie3

Related Post