Breaking
Sat. Jan 11th, 2025

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார்.

பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாங்கள் அரசில் இருந்து வெளி­யே­றுவோம் என குறிப்­பிட்டோம் இன்று அதை செய்து காட்­டி­விட்டோம். ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் புதிய கூட்­ட­ணி­யி­னையும் உரு­வாக்­கி­விட்டோம். இந்த கூட்­டணி தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் உரி­மைக்­கான கூட்­டணி. இதில் சகல மக்­களின் உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தங்­கி­யுள்­ளன. ஆகவே, அனை­வரும் கைகோர்த்து எமது பய­ணத்­தினை வெற்றிப் பய­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

ஜனா­தி­பதி யுத்­தத்­தினை வென்­றெ­டுத்­ததும் தனக்­கெ­தி­ரான சக்­தி­களை இனங்­கண்­டதும் தனது புல­னாய்வு பிரி­வி­னரை வைத்தே. இதை தான் பெரிதாக மார்­தட்டிக் கொள்வார். ஆனால், ஜனா­தி­ப­தியின் புல­னாய்வு பிரி­வினரை வைத்து தனக்கு எதி­ரான வேட்­பாளர் யார் என்­பதை இனம்­காண முடி­யாது போய்­விட்­டது.

தனது எதி­ரணி வேட்­பா­ளரை தன்­னு­ட­னேயே வைத்துக் கொண்டு வெளியில் தேடி­யுள்ளார். இன்று நாங்கள் வெளி­யே­றி­யது அவ­ரு­ட­னான தனிப்­பட்ட விவ­கா­ரத்தில் அல்ல, நாட்டில் அவரை சர்­வா­தி­கா­ரி­யாக உரு­வெ­டுக்க விடக்­கூ­டாது என்­ப­தற்­காகவேயாகும். எமக்கு கட்­சி­யினை விடவும் நாடும் மக்­க­ளுமே முக்­கியம். நாங்கள் சாவுக்கு அஞ்­ச­வில்லை. துணிந்து களத்தில் இறங்­கி­யுள்ளோம். எனவே, இதில் வெற்­றி­பெற வேண்டும்.

அதேபோல் இன்று அரசில் இருந்து நாளுக்கு நாள் உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­கின்­றனர். நாம் வெளி­யே­றி­ய­வுடன் வேறு எவரும் வெளி­யேவர மாட்­டார்கள் என அரசாங்கத்தில் தெரி­வித்­தனர். ஆனால் நேற்று ஒருவர் இன்று ஒருவர் என வெளி­வர ஆரம்­பித்து விட்­டனர். நாங்கள் அரசின் முழுப் பற்­க­ளையும் ஒன்­றாக பிடுங்­கி­விட நினைக்­க­வில்லை.

தனித்­த­னி­யா­கவே பிடுங்­குவோம். இன்னும் சில நாட்­களில் அரசின் முக்­கியப் பற்­களை கழற்றி எடுப்போம். நாம் சொல்வதை செய்து காட்டுவோம். ஜனாதிபதி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார். இனி அவரால் தூங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். (vk)

Related Post