இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார். இதன்படி அவர் புறா சின்னத்தில் போட்டியிடுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த கட்சியை பதிவு செய்தார். இந்தநிலையில் ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளர் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பொதுவேட்பாளர் மற்றும் சின்னம் என்பதை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். கட்சியின் தனித்துவம் எந்தநேரத்திலும் பேணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.