ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சித்திக் நதீர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று (06) திருகோணமலை விவேகானந்தா கலையரங்கில் இடம் பெற்றது.
தாதிப் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த 200 மாணவ மாணவிகள் தாதிமார்களாக பட்டம் பெற்றனர்கள்.
கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதி உட்பட விரிவுரையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஈ.ஞாணகுனாளன், திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.டி.ஏ.ரொட்ரிகோ, பிரதி பணிப்பாளர் டாக்டர் அனுசியா ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.