Breaking
Thu. Jan 9th, 2025

சுமார் முப்பது வருடத்திற்கு மேலாக காணப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணி சீர்திருத்த   ஆணைக்குழுவுக்கு சொந்தமான  காணிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள்  வழங்குவதற்கான ஆரம்ப  நிகழ்வு இன்று திங்கட் கிழமை (08) கிண்ணியா அல் அதான் பாடசாலையில்   இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரிலும் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தவிசாளர் ஸ்ரீமெவன் டயஷ் தலைமையிலும் இடம் பெற்றது.

ஆரம்ப கட்ட உறுதிப் பத்திரம் வழங்கும் வைபவத்தில் கிண்ணியா மஹ்ரூப் நகர், பைசல் நகர், அண்ணல் நகர் உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்  தவிசாளர் ஸ்ரீமெவன் டயஷ், பணிப்பாளர் என். விமல்ராஜ், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதி தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி, எம்.டீ.ஹரீஸ்,கலீபத்துள்ளா, கிண்ணியா பிரதேச காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள்,கிராம அதிகாரிகள், பயனாளிகள்  உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

Related Post