Breaking
Thu. Dec 26th, 2024
கண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் அருள் நிறைந்த அற்புதமான றமழான் நம்மை வந்தடைந்திருக்கிறது.
இதனை வரவேற்கும் நாம் இப்புனித நாட்களில் நல் அமல்களில் ஈடுபடுவதுடன்  நாட்டின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் சமூகத்தின் நிம்மதிக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கும் தினங்களாக பிரகடனப்படுத்துவோம்.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள புனித றமழான் தினச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
படுபாதகர்களின் ஈனச்செயல்களினால் இந்த நாட்டு முஸ்லிம் சமுகம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.சுதந்திரத்திற்கு பின்னரும் முன்னரும் தேசப்பற்றாளர்களாகப் பார்க்கப்பட்ட சமூகம் சில கயவர்களினால் தேசத்துரோகிகளாகப் பார்க்கின்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையிலிருந்து இந்த சமுகம் விரைவில் வெளியே வரவேண்டும்.முஸ்லிம்கள் மீதான ஏனைய சமுகத்தவர்களின் சந்தேகப்பார்வை மாறவேண்டும்.அதற்கு எம்மிடமுள்ள ஒரே ஆயுதம் பிரார்த்தனை மட்டும் தான்.
எனவே நோன்பாளிகளின் பிரார்த்தனைகளை  அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.புனித நோன்புடன் செய்யும் பிரார்த்தனைகள் ஏற்கப்படுகின்றன.அந்த அடிப்படையில் தஹஜ்ஜுத் வேளை உட்பட நோன்பு திறக்கும் நேரங்களிலும் நமது சமுக பாதுகாப்பிற்காககவும் நாட்டின் அமைதி சமாதானத்திற்காகவும் பிராத்தனையில் ஈடுமாறு அமைச்சர் மேலும் கேட்டுள்ளார்.

Related Post