Breaking
Tue. Dec 24th, 2024
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கரையோர வீதியானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரதியமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் இன்று (26) ஞாயிற்றுக் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மிக நீண்ட கால தேவையாக இருந்த குறித்த வீதி மீனவர்களின் நலன் கருதியும் போக்குவரத்துக்கான இலகு கருதியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பல வருட காலமாக அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட இவ் வீதி ஊடாக பல சாதகங்களை மக்கள் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் பெரியாற்று முனை சனசமூக நிலைய உறுப்பினர்கள், உள்ளிட்ட பொது மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post