ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களோ அல்லது சர்வதேச சக்திகளோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச்செயல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியையோ அல்லது படைவீரர்களையோ நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
சரியான நல்லிணக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.