இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்க உள்ளார்.
2014 காலி பேச்சுவார்த்தை நிகழ்வில் சிறப்பு உரையொன்றை தோவால் ஆற்ற உள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அஜித் தோவால் சந்திக்க உள்ளார்.