Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சவுத்பார் கிராமத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் கலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் வீதி திறப்புவிழா நிகழ்வினை தொடர்ந்து 20 நபர்களுக்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் வழங்கும் நிகழ்வும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் ஹரிணி மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் மன்னார் நகர சபை தேர்தல் வேற்பாளர் வேங்கை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post