சம்மாந்துறையிலுள்ள பல வீதிகள் சீரற்று காணப்படுகின்ற அவலம் செந்நெல் கிராமம் மற்றும் மலையடிக் கிராமம் போன்ற பிரதேசங்களில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கௌரவ பராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதற்கமைவாக அம்பாறை – 12 ஏ வீதியில் வசிக்கின்ற மக்களில் சிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினரை நாடி தங்களது வீதியின் அவல நிலை குறித்து கலந்துரையாடிய பின்னர் அவ் வீதிக்கான கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணியை கம்பெரலிய வேலைத் திட்டத்தினூடாக துரித கதியில் செய்து முடிக்கும் பொருட்டு இன்று (30) பிற்பகல் குறித்த பிரதேசத்தை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
அவ்வாறு பார்வையிட்ட அம்பாறை – 12ஏ வீதியினதும் அதனை அண்மித்த மற்றுமொரு குறுக்கு வீதியினதும் (அஷ்ரப் லேன்) அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரால் பணிப்புரை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.