திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றுள்ளது
குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (30) இடம் பெற்றன.
பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் கொங்ரீட் வீதி திறந்து வைக்கப்பட்டது
இதே பகுதியில் சுமார் இருபது இலட்சம் ரூபா செலவில் அமையப் பெறவுள்ள சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றது.
இதில் கந்தளாய் பிரதேச சபையின் உபதலைவர் சட்டத்தரணி மதார், சட்டத்தரணி பௌமி உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.