தி/மூதூர் மத்திய கல்லூரி பாடசாலையின் மைதான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக இக் கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அகீதா நஸார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.