சம்மாந்துறை செந்நெல் கிராமம் – 2 இல் அமைந்துள்ள புழியடி வீதியின் நிலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த வீதியின் அவல நிலையை செவியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த வீதியின் நிலைமையினை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில காலங்களில் குறித்த வீதியினை அபிவிருத்தி செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதேசவாசிகளிடம் உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது