Breaking
Sun. Jan 12th, 2025
நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும்”ரண்மாவத்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்படும் வீதி அங்குரார்ப்பண வைபவம் நாளை (08) ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளது
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் கிண்ணியாவில் உள்ள பெரியாற்று முனை வீதி, அம்மன் வீதி, பலாஹ் ஜூம்ஆ பள்ளி முன் வீதி ஆகியன காபட் இடப்படுவதற்கான ஆரம்ப வைபவம் இடம் பெறவுள்ளது
நாளைய தினம் காலை 10.00 மணிக்கு கிண்ணியா தளவைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அம்மன் வீதிக்கான ஆரம்ப காபட் இடும் நிகழ்வு இடம் பெறவுள்ளது
இக் குறித்த நிகழ்வில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Related Post