“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முக்கிரியாவ அ/முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 40 மில்லியன் ரூபாய் செலவீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 2 கட்டிடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் கெ.பி.மொஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சஹீது, கஸ்த்தூரி அனுராத நாயக்க அவர்களும் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் உப தவிசாளர் நஜீம் அவர்களும் கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்தின் தமிழ் மொழி பிரதி கல்வி பணிப்பாளர் ஜோசப் அவர்களும் சமூக சேவையாளர் தேசமான்ய ARM.தாறிக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின்போது குறித்த பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட சுற்று மதில் பாராளுமன்ற உறுப்பினரால் உத்தியோகபூர்வமாக பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
நமது நாட்டின் எதிர்காலம் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறார்களிலேயெ தங்கியிருக்கின்றது. ஆகவே அச்சிறார்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் என்பவற்றின் வளர்ச்சி குறித்து எமது இன்றைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தைப்போல் தொடர்ச்சியாக பல செயற்றிட்டங்களை கல்வித்துறையின் அபிவிருத்திக்காக மேற்கொள்வதில் எமது இன்றைய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மும்முறமாக இயங்கி வருவதானது உன்மையிலேயே பாராட்டத்தக்க ஓர் விடயமாகும்.
கல்வியின் அபிவிருத்தி தொடர்பில் நாட்டின் தலைவர்கள் புத்திசாதுர்யமான பல செயற்றிட்டங்களை பல சவால்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தி பாடசாலைகளின் தரத்தினயும் மாணவர்களின் தரத்தினயும் உயர்த்த எத்தணிக்கயில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் பாடசாலைகளுக்குள்ளும் அரசியல் செய்ய எத்தணிப்பதானது கண்டிக்கத்தக்க ஓர் விடயமாகும். அவ்வாரு பாடசாலைகளுக்குள் அரசியல் செய்ய துடிப்பவர்கள் நிச்சயமாக எமது பிள்ளைகளின் எதிர்காலங்களை வீணடித்து விடுவார்கள் என்பதில் ஐயம் கொள்ளவேண்டாம். பாடசாலைகளுக்குள்ளே இன, கட்சி பேதங்களை கொண்டு வரவேண்டாம். பாடசாலை ஓர் புனிதமான இடமாகும். அப்புனிதமான இடத்தின் மூலம் எமது நாட்டின் எதிர்காலத்தை வெளிச்சமானதாக கட்டியெழுப்ப கட்சி சாயங்கள் பூசாமல் சகல அரசியல்வாதிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றாய் கைகோர்க்க வேண்டுமென தெரிவித்தார்.