அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் என்பனவற்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் 2019.07.04 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.
பாடசாலை அதிபர் சஹாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுக சேவையாளர் தேசமான்ய ARM.தாரிக், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் உப தலைவர் நஜீம், ஹொரொவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் டில்ஷான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்