Breaking
Sat. Jan 11th, 2025

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும்” ரண்மாவத்” திட்டத்தின் கீழ் வீதிகளுக்கு காபட் இடும் ஆரம்ப பணி நேற்று (07) கிண்ணியா பைசல் நகர்_ பலாஹ் பள்ளியின் முன்  வீதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த காபட் வீதிக்கான அங்குராரப்பண வைபவம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும் அவர்களின்  தலைமையிலும் இடம் பெற்றுள்ளது.

இவ் வீதியினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் உத்திதோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட் , கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்மி, ராலியா, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ரெஜீன், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வர்,கந்தளாய் பிரதேச சபை உபதவிசாளர் சட்டத்தரணி முதார்,திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ், உட்பட கட்சி ஆதரவாளர்கள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Related Post