Breaking
Tue. Dec 24th, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் பிஷாந்த குணவர்தன, சமய தலங்கள் மற்றும் தொல்பொருள் அரும்பொருட்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சுமத்தினார்.

சமய தலங்கள் இருந்த இடங்களில் தற்போது விருந்தகங்கள் அமைப்பட்டுள்ளன. மூதாதையர்கள் பாதுகாத்து வந்த தேசிய உரிமங்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது.

அரும்பொருட் காட்சியகம் இரண்டாவது முறையும் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இவ்வாறான அரசாங்கத்தை மீண்டும் ஆட்சி பீடம் ஏறச் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post