Breaking
Tue. Dec 24th, 2024
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானங்களை பெறும் 500 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் அபேட்சகர் நளீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தேசமான்ய ARM.தாறிக், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர்கள், குறித்த செயற்றிட்டத்தின் பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை முஸ்லிம்களின் நிகழ்கால காவலனாய் திகழும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் எமது சமூகத்துக்கு ஆற்றி வரும் சேவையானது அளப்பரியது.
தலைவர் ரிசாத் பதியுதீனின் சேவை வட, கிழக்கு மட்டுமன்றி முழு தீவுக்கும் சென்றடைந்துகொண்டிருக்கின்றது என்பதனை இன்றைய இதுபோன்ற நிகழ்வுகள் எமக்கு பரைசாற்றி நிற்கின்றன.
கடந்த சில மாதங்களாக வார்த்தைகளில் அளவிட முடியாத பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து வந்த முஸ்லிம்களுக்காக தங்களது அமைச்சுப்பதவிகளை துறந்து வீர நடை போட்டுக்கொண்டிருக்கும் எமது முஸ்லிம் தலைவர்களில் முன்னனி வகிக்கும் தலைவர் றிசாத் பதியுதீன்.
இப்படியான தலைவர்கள் தமது உயிரையும் துச்சமென மதித்து குரல் கொடுப்பதினாலாயேதான் இந் நாட்டில் நம் சமூகத்தின் இருப்பானது உறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த சில நாட்களாக நம் தலைவனுக்கெதிராக அடுக்கடுக்காக பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் இனவாதிகளின் வலைப்பிண்ணள்களிலிருந்து எமது தலைவரை அல்லாஹ் பாதுகாத்திடவேண்டுமென இந் நாட்டில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் தங்களது தொழுகைக்கு பின்னாள் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Related Post