Breaking
Mon. Dec 23rd, 2024

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர்  பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடமைப்பு கிராமம்  இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால்   மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பயனாளிகளிடம்   “பாவநாசம் 225வது கிராமம்”  கையளிக்கப்பட்டது.இங்கு 17 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்  தொல்காப்பிய நகர் 226வது கிராமமாகும்.  இங்கு 25வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  அப்துல்லா மஃறூப், சந்திப் சமரசிங்க,திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமார், பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post