ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதே கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை தான். இப்பரீட்சையின் வெற்றியென்பது அந்த மாணவனை வெற்றியின் விழிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறது. எனவே, குறித்த பரீட்சைக்குத்தோற்றும் அனைத்து மாணவர்களும் சித்தியடையவும் பல்கலைக்கழக வாய்ப்பைப்பெறவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தரத்தேர்வில் சறுக்குகின்ற மாணவன் முழு வாழ்க்கையையுமே இழப்பதற்குச் சமமான நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அவ்வளவு தூரம் குறித்த பரீட்சை முக்கியத்துவமாகின்றது.
வாழ்வின் எல்லைக்கோட்டைத் தொடத்துடிக்கும் அத்தனை மாணவர்களும் சித்தியடையவும் பல்கலைக்கழகம் நுழையவும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.