Breaking
Mon. Dec 23rd, 2024
முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன். என துறை முகங்கள் மறறும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது
பல்லின  சமூகங்கள் வாழும் இந்த  நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் ,ஒற்றுமையுடனும் அனைவரும்  இந்நாளில் வாழ வேண்டும் .
சகல சமூகங்களுக்குமிடையில் கசப்புணர்வற்ற நல்ல உணர்வோடும் புனித மக்காவில் ஹஜ்ஜாஜிகள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளர்ப்பதற்கு வழிவகை செய்கிறது.
ஹஜ் என்பது தியாகம் ,சகிப்புத்தன்மை விட்டுக் கொடுப்பு ,பொறுமை போன்றவற்றை எமக்கு கற்றுத் தந்திருக்கிறது இச் செய்தியை ஏனைய சமூகத்துக்கும் கொண்டு செல்வோம்.

இந்நாளில் உழ்கியா கடமையும் உள்ளது இதனை நமது வறுமைப்பட்ட சகோதரர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களையும் சந்தோசப்படுத்துவோம். ஹஜ்ஜினுடைய கடமைகளில் ஒன்றான உழ்கியா என்ற கடமையை 11,12.13 பிறை நாட்களில் வைத்துக் கொள்வோம்.நமது நபி சொல்லாத 14 ஆவது நாளில் இக் கடமையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டாம் அது வெறும் சடங்காகவே அமையும் இதன் மூலம் அந் நாளை தவிர்ப்பதன் மூலம் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடைய அன்பைப் பெற்று இன ஐக்கியத்தை வழியுறுத்துவோம்.

அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் ..
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்…

Related Post