இப்றாஹிம் நபி அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கைதான் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் உம்மாக்களுக்கான மிகச்சிறந்த படிப்பினைiயாகும்.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய தியாகத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவு கூர்ந்து புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் இவ்வாறு மலர்ந்துள்ள புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அi8மச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அச்செய்தியில் உலகளாவிய முஸ்லிம் உம்மாக்கள் பாரியளவிலான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள இன்றைய நெருப்;புச் சூழலில் இப்புனித தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாள் மலர்ந்துள்ளது.இலங்கையிலும் முழு உலகிலும் இஸ்லாத்திற் கெதிரான அடக்குமுறைகளும் ஏகாதிபத்திய சிந்தனைளும் அதிகரித்துள்ளன.
இறுதியாக இந்திய கேஸ்மீர் பூமியும் முஸ்லிம்களுக்கெதிரான சக்திகளால் பறிபோயுள்ளது.இவைகளிலிருந்து முஸ்லிம் உம்மாக்கள் விடுபட முஸ்லிம்களிடையே ஒற்றுமை தேவையாகின்றது.
நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இஸ்லாமியர்கள் தியாகத்திருநாளில் இப்றாஹிம் நபியவர்களின் தியாகத்தை மனதிற்கொண்டு பொறுமையுடனும் நிதானத்துடனும் சமுக ஒற்றுமைக்காகவும் நாட்டில் அமைதிக்காகவும் பிரார்த்திப்பதோடு இனங்களிடையே அமைதிக்காகவும் அர்ப்பணிப்புச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.