திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் கண்டி மாவட்ட செயலாளர் டி.எம்.என்.ஜி.கருணாரத்ன, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.