Breaking
Wed. Dec 25th, 2024

அரச கூட்டுக்குள் இருந்து கட்சித் தாவல்கள் தொடர் வதால், அதைத் தடுத்துநிறுத் துவதற்கு அரசு பல்வேறு வியூ கங்களை வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக பங்காளிக் கட்சிகளின் ஆதரவை உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் அது தீவிரமாக இறங்கியுள்ளது. இதன்பிரகாரம், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த தலைமை யிலான அரச தரப்பு உறுப்பினர் கள் இருதரப்பு பேச்சுகளை நடத் தியுள்ளனர்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன. அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக் கைகள் தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடலை நடத்துவதற்கு இதன்போது அரச தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அடுத்த வாரமளவில் இந்தச் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. இந்தத் தகவலை மு.காவின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி எம்.பி. நேற்று உறுதிப்படுத்தினார்.

அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கை, கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதல்வர் பதவி, தமிழ் பேசும் அரச அதிபர்கள் நியம னம், காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப் பின்போது கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது. எனவே, இந்த விடயதா னங்களுடன் தொடர்புடைய அமைச் சுகளுடனேயே சந்திப்புகள் இடம்பெற வுள்ளன என அறியமுடிகின்றது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர் தலில் மஹிந்த ராஜபக் ­வுக்குத்தான் ஆதரவு வழங்கப்படும் என்ற உறுதி மொழியை மு.கா. இன்னும் வழங்க வில்லை. ஜனாதிபதியுடனான சந்திப் பின்போதும் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அது அறிவிக்க வில்லை. தேர்தல் விஞ்ஞாபனம் மற் றும் தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசின் பதில்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டே இது விடயத்தில் மு.கா. இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

அரத தரப்பில், ஜனாதிபதி மஹிந்த ­, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யின் பொதுச்செயலாளர் அமைச்சர் அநுர பிரியதர்­ன யாப்பா, தேசிய அமைப்பாளரான அமைச்சர் பஸில் ராஜபக்­, பொருளாளர் டலஸ் அழகப் பெரும ஆகியோரும், மு.காவின் சார் பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொதுச்செயலாளர் ஹசனலி எம்.பி. மற்றும் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்(0s)

Related Post