Breaking
Tue. Dec 24th, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம் நேற்று மாலை (18) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில் குளியாப்பிடிய சியம்பலாகஸ்கொடுவ ரிச்வீன் மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இதன் போது தெளிவுபடுத்தினார்.
பிரதேச அபிவிருத்தி,வாழ்வாதார திட்டங்கள் போன்ற விடயங்களூம் எடுத்துரைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடம் விரிவான விடயங்களை நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் சுபைர்டீன் ஹாஜியார் தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸூபைர்தீன் ஹாஜியார், அமைச்சர் ரிசாத்பதியுதீனின்  பிரத்தியோக செயலாளர் டில்ஷாட், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், குளியாப்பிடிய பிரதேசசபை உப தலைவர் இர்பான், குருகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட  இளைஞர் அமைப்பாளருமான அஸார் தீன், பிரதேசசபை உறுப்பினர்களான அஸ்ஹர், ஷபீர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் கட்சியின் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீன், கல்வி பொறுப்பாளர் ரியாஸ் அஸ்ஹரி, கொள்கை பரப்பு செயலாளர் இம்ரான் கான்,தொகுதி அமைப்பாளர்கள், பிரதேசசபை வேட்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post