திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது
குறித்த நிகழ்வானது இன்று(17) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது
வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,திறன் அபிவிருத்தி,கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணியின் ஊடாக சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் குறித்த பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.
இக் குறித்த நிகழ்வில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார்,ஆர்.எம்.றஜீன்,தன்சூல் அலீம்,முள்ளிப்பொத்தானை வடக்கு வட்டார வேட்பாளர் ஏ.சீ.நஜிமுதீன்,முன்னால் தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் வாகிட் மற்றும் முன்னால் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் நஜிபுள்ளா,வேட்பாளர் என்சுலூன் ஆபிலூன் உட்பட பள்ளிவாயல் தலைவர் ஊர் பிரமுகர்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.