பாரிஸ்
பா.உ.அஸ்வர் பதவி விலகியமையினை தொடர்ந்து ஊடகங்கள் அப்பதவிக்கு அமீர் அலி பா.உ நியமிக்கப்படலாம் என்ற செய்திகளை பரவலாக வெளியிட்டன. இருப்பினும், அ.இ.ம.கா. வின் தவிசாளர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி உறுதியாக “கல்குடா மக்களின் முடிவே எனது முடிவாகும்” – என்று கூறிவிட்டார்.
இதற்கு மத்தியில் நேற்று 30.11.2014ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சருமான றிஸாத் கல்குடாவுக்கு வருகை தந்தார்.
நேற்று மாலை மீராவோடையில் அமைத்துள்ள அமீர் அலி கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி,கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளிட்ட கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் உலமாக்கள்,பள்ளி வாயல் நிருவாகங்கள்,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்,புத்திஜீவிகள்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் போது போது பொது மக்கள் பலர் தமது கருத்துக்களை பகிர்த்து கொண்டனர் பொது மக்களின் கருத்து
01 எமது அபிலாஷைகளையும் உரிமைகளையும் இழந்து அரசியல் அநாதையாக நடுவீதியில் தந்தளிக்கும் எமக்கு ஒரு பாராளு மன்ற பிரதிநிதித்துவம் தேவை ஆகையினால் அப்பதவியினை கல்குடா மக்களின் நலன் கருதி ஏற்க வேன்டும்.
02.வெறும் புச்;சான்டி காட்டுவதற்காக இந்த அரசாங்கம் இப்பதவியினை தந்தால் அதனை ஏற்க வேன்டாம் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் மாத்திரமே இப்; பதவியினை ஏற்க வேன்டும்
03. அமீர் அலி பாராளு மன்ற உறுப்பினர் பதவியினை ஏற்றால் அமீர் அலியின் மாகாண சபை வெற்றிடத்துக்கு கல்குடாவுக்கு சொந்தமான மாகாண சபை உறுப்பினர் பதவி கல்குடாவிலேயே வழங்கப்பட வேன்டும்.
எனவும் பல்வேறு சமூக நலன்களை முன்னிட்ட கோரிக்கையினை பொது மக்கள் கட்சி தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.
மக்களின் கருத்துகளை தொடர்ந்து உரையாற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார் ‘அரசாங்கம் பிள்ளையை பெற்று எடுத்து விட்டு இறுதி தருவாயில் அமீர் அலியை பெயர் வைக்க அழைக்கிறது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருத்தது.
ஆனால் அரசு எதிர் பார்த்த ஆசனங்களை அரசாங்கத்தினால் பெற முடியாத நிலை ஏற்பட்டதும் மாற்று கட்சினையும் இனைந்து கொண்டு ஆட்சி அமைக்க நேரிட்டது. அமீர் அலியினை முதலமைச்சராக ஆக்கினால் தமது ஆதரவுகளை வழங்க முடியாது என்ற ஆணிதரமான கோரிக்கையினை மாற்று காட்சியினர் முன்வைத்தனர்.
இதனை அடுத்து அரசு எம்மிடம் இந்த கிழக்கு மாகாண சபையில் எம்மால் ஆட்சியமைக்க முடியாமல் போய் விடுமானால் வடக்கும் கிழக்கும் இனைந்து இந்நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் அவ்வாறு இடமளிக்க வேன்டாம் நாம் அமீர் அலிக்கு பிரதி அமைச்சு பதவி தருகின்றோம் என்று கூறி இக்கட்டான சூழ் நிலைக்கு மத்தியில் எம்மை ஒப்பு கொள்ள வைத்தனர். இதனை நம்பிய நாம் ஏமாத்து போனோம்.
ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டில் 10 வீதமாக இருக்கின்ற 20 லச்சம் முஸ்லிம்கள் இந்த முஸ்லிம்களுடைய கட்சிகள் யாரை ஆதரிக்க போகின்றனர் என்று ஊடகங்கள் கேள்ளி எழுப்பி கொண்டிருக்கும் இச் சந்தர்பத்தில் பத்திரிகையில் அஸ்வர் ஹாஜி பதவி விலகி விட்டார் அமீர் அலி அப்பதவிக்கு நியமிக்க படுகின்றார் என்ற செய்தி வந்ததும் அமீர் அலி தொலை பேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு எனது பெயரை யார் கொடுத்தது என்று முரண்பட்டார்.
அவ்வேளையில் அரசின் உயர் மட்டத்தில் இருத்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது உடனடியாக தம்மை வந்து சந்திக்குமாறு நானும் அமீர் அலியும் அமைச்சர் பௌசியும் அவ்விடத்துக்கு சென்றோம்.
அங்கு சென்றதும் கையொப்பம்மிடுங்கள் என்று அமீர் அலியிடம் கூறினர் அதற்கு அமீர் அலி எதற்காக கையொப்பம்மிட வேன்டும் என்று கேட்டார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பொறுப்பொடுங்கள் என்று கூறினர் அதற்கு அமீர் அலி எப்பதவியினையும் கல்குடா மக்களின் அனுமதியில்லாமல் நான் பெற தயார் இல்லை என கூறிவிட்டு வெளியோறி விட்டோம்.
இப்தவியினை எடுப்பதா? வேன்டாமா? என்று கல்குடா மக்களாகிய நீங்கள் தீர்மானித்து எமக்கு கூறி விட்டிர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பொறுந்தவரை கல்குடா சமூகமும் அமீர் அலியும் இக்கட்சியின் மீது தலைவராகிய எனக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கின்றதோ அந்தளவுக்கு உரிமை அமீர் அலிக்கும் கல்குடா மக்களுக்கும் உண்டு என சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்கள் என்னை பார்த்து எமது கட்சியும்,தலைமையும் மைத்திரிக்கு தான் ஆதரவளிக்க வேன்டும் மஹிந்தவுக்கு தான் ஆதரவளிக்க வேன்டும் என்று சொல்லுவாராக இருத்தால் அவருடைய வார்த்தையில் ஆர்தம்மிருக்கும் என்று உணர்ந்து நான் அவ்வாறே செயற்படதயார்.அவ்வாறான தூர சிந்தனையில் தான் நானும் அமீர் அலியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இருத்து பிரித்து வந்து இக்கட்சியினை ஸ்தாபித்தோம்.
இறைவனின் உதவியினால் இந்த குறுகிய காலத்துக்குள் இந்த கட்சி பாராளு மன்றத்தில் 03 ஆசனங்களையும் மாகாண சபையில் 07 ஆசனங்களையும் உள்ளுராட்சி சபையில் 04 தவிசாளரையும் 4 உப தவிசாளரையும் ஏழுபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய கட்சியாக காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் போட்டி இட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அடுத்த இடத்தில் இருக்கின்ற ஒரு பலம் வாய்ந்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிகழ்கின்றது. என்றால் அக்கட்சியினை வளர்ச்சிக்கும் அத்தனை பங்களிப்புக்கும் காரணம் அமீர் அலியே
இந்த கட்சியினை இந்த அரசாங்கம் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக எம்மை பார்க்கிறது எனவே தான் நாம் இந்த இடத்திலே இப்பதவியை பொறுப்பு எடுப்பதா? இல்லயா என்பதனை கேட்பதற்காக தான் நாம் இங்கு வருகை தந்தோம்.
ஆனால் கல்குடா மக்கள் பொறுமதி மிக்க கருத்துக்களை கூறி எமக்கு அளித்த ஆணையுடன் எங்களுடைய கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்களுடன் பேசி இப்பதவியினை பொறுப்பு எடுப்பது தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீன் தமது உரையின் போது குறிப்பிட்டார்.