Breaking
Wed. Dec 25th, 2024
(Rizvi Jawharsha)
மைத்ரீ ஒரு பதிவு..!
சில மாதங்களுக்கு முன்னர்…! சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு. ஒரு விஷேட வைபவம் குறித்த இடதிட்கு குறித்த நேரத்த்திட்கு வருமாறு அந்த அழைப்பு சுகாதார அமைச்சர் மைத்ரீ இடம் இருந்து.
அனைவரும் வந்து சேர்ந்தனர். என்ன நிகழ்வு? ஏன் அழைக்கப்பட்டோம் ?அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அமைச்சரின் தொலைப்‌பேசியில் இருந்து அமைச்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் திருமதி Ahamed க்கு ஒரு அழைப்பு
“வைபவத்திக்கு வரவில்லையா?”
“இல்லை தனிப்பட்ட விடுமுறையில் இருக்கிறேன்”
திருமதி. Ahamed பதில் கூறினார்.
” ஒரு 10 நிமிடம் வந்து விட்டு போக முடியுமா?”
அமைச்சரின் விநயமான வேண்டுகோள். அமைச்சரின் அழைப்பு. மறுக்க முடியவில்லை. Mrs. Ahamed கலந்து கொள்கிறார்.
வைபவம் ஆரம்பம். மைத்ரீ வெற்றிக்களிப்பில்..!
சிகரட் packet இல் புற்று நோய் எச்சரிக்கை படம் பிரசுரிப்பு போராட்டத்தில் பெற்ற வெற்றிக்காக ஐ. நா. இன் உலக சுகாதார அமைப்பினரால் வழங்கப்பட்ட விஷேட விருதுடன் கலந்து கொண்ட அமைச்சர்..
” இது எனது வெற்றியில்லை. உயர் நீதி மன்றம் வரை சென்று போராடி வெற்றியை கொண்டு வந்து சேர்த்த திருமதி Ahamed அவர்கள் தான் இந்த விருதின் உண்மையான சொந்தக்காரர். 
எனவே இந்த விருதை நான் திருமதி ahamed அவர்களுக்கு வழங்குகிறேன் என்று அந்த சர்வதேச விருதினை ஒரு சிறுபான்மை சட்டத்தரணிக்கு உயர் அதிகாரிகளின் பலத்த கரகோஷத்ீத்ற்கு மத்தியில் வழங்கி கௌரவித்தார்.
ஆதாரத்துடன் Rizvi jawharsha.

Related Post