ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை எதிர்வரும் 7ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதிவு செய்த அரசியல் கட்சியொன்றிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.