Breaking
Thu. Dec 26th, 2024
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலையின் அதிபர் அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று (27) மாலை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பாடசாலை மைதானத்துக்கான நுழைவாயில்,கிரவிடல் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன புனரமைக்கப்பட்டு கம்பரெலிய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
பாடசாலை மாணவ மாணவிகளால் பிரதியமைச்சரை இசைவாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளித்தார்கள்.
இதன் போது பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரமும் அதிபர் முன்னிலையில் பிரதியமைச்சரால் கையளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னமும் அதிபரால் பிரதியமைச்சருக்கு வழங்கப்பட்டதுடன் பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது. இதில் மாணவ மாணவி தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் அரங்கேறியது.
கலை கலாசார நிகழ்வுகளும் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.
குறித்த நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் இஸட்.எம்.எம்.திருமதி முனவ்வரா நளீம்,பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் வைத்தியர்.ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட்,கலீபத்துள்ளா,அல்ஹிஹ்மா பவுண்டேசனின் தலைவர் இபாதுல்லா மௌலவி உட்பட கிண்ணியா வலய அதிபர் சங்க தலைவர் முஸம்மில் ,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post