ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்தவின் கடையில் காலாவதியான பொருள்களே விற்பனையாகின்றன. அவற்றின் விலைகளும் அதிகமானது. அதை விட அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விஷமுண்டு.
அதனால் ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர், மைத்திரிபால வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்தும் போராடுவோம்.
மஹிந்தவின் கடையை மூடுவது சுலபமானதல்ல. சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சி ஏற்படும் வரையில் போராட்டங்களைக் கைவிடப்போவதில்லை.- என அவர் தெரிவித்தார். (ஒ)