Breaking
Thu. Dec 26th, 2024
கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சூரங்கல்- முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (.05) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியானது 4கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சுமார் 51 மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பிரதியமைச்சரின் அயராத முயற்சியினால் இவ் வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி ,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்…

Related Post