Breaking
Thu. Dec 26th, 2024

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1ல் அமைந்துள்ள பொது மைதான அபிவிருத்திற்காக 17 மில்லின் ரூபா முதல்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியின் பலனாக சம்மாந்துறை பொது மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடாகவே குறித்த தொகை RIDP திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாரிய தொகை இதன் அடுத்தகட்ட ஒதுக்கீடாக கிடைக்கப்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மைதானத்தின் பல வருடகால குறைபாடுகளைக் கவனத்திலெடுத்து பலராலும் செயற்றிறனுடன் மேற்கொள்ளப்படாமலிருந்த பெருமளவிலான அபிவிருத்தியை இம் மைதானம் காணவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

Related Post