Breaking
Wed. Dec 25th, 2024
ஏ.எச்.எம்.பூமுதீன்
எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர்  எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் உறுப்பினர்களான அப்துல் ரஹ்மான் ,சுபியான் ,காமில் ,சுல்பிகார் போன்ற  சபையின் 06 அ.இ.ம.கா உறுப்பினர்களும் ஹூனைஸ் எம்பி , முசலி மக்களுக்கும் வன்னி முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் செய்த துரோகத்தனத்திற்கு முசலி மக்கள் விரைவில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் முசலி பிரதேச சபையில் ஆளும் அ.இ.ம.கா உறுப்பினர்கள் அறுவர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளமை வருமாறு
அரசியல் வழிகாட்டியான தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு துரோகம் இழைத்து வன்னி முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தது மட்டுமன்றி இன்று தலைவருக்கு எதிராக ஊடகங்கள் ஊடாக அவதூறுகளையும் தவறான  பிரச்சாரங்களையும் ஹூனைஸ் எம்பி முன்னெடுத்து வருகின்றார்.
கடந்த ஓர் இரு தினங்களுக்கு முன்னர் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தஹஜ்ஜத் என்னும் அதிகாலை தொழுகையை தொழுவதாகவும் அதில் பிரார்த்தனைகள் செய்வதாகவும்  ஏதோ உளறிக் கொட்டிய அவர், தான் ஒரு புனித இஸ்லாமியவாதி என்ற ரீதியிலும் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் சிறப்பாக செயற்படுபவன் என்பது போன்றும் ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்.
தஹஜ்ஜத் தொழுகை என்பது அனைவரும் தொழுகின்ற ஒரு விடயம். நான் தொழுகையாளி என்று உலகத்திற்கு  இதுவரை யாரும் பேட்டி வழங்கியது கிடையாது. ஆனால் அந்தச் சாதனையை அவரே முதல் முதலில் நிலைநாட்டியும் உள்ளார்.
 ஹூனைஸ் எம்பி,  தான் தொழுகையாளி ,மார்க்கப்பற்றுள்ளவன் என்று அவராகவே கூற முற்படுவதானது தான் பணத்திற்காக கட்சி மாறவில்லை என்பதை மறைப்பதற்கு முயற்சிக்கின்றார் என்பதை தெளிவாக காட்டுகின்றது
அது ஒரு புறம் இருக்க இஸ்லாத்தைப்பற்றி பேசுவதற்கு அல்லது இஸ்லாமிய போதனைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு இந்த எம்பிக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. இஸ்லாம் வலியுறுத்துகின்ற அமீர் எனும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாது அந்த தலைமையும் வன்னி முஸ்லிம்களும் வழங்கிய அமானிதத்திற்கு அநீதி இழைத்த இந்த எம்பி தஹஜ்ஜத் தொழுவது என்று அவராகவே கூறுவதை நினைக்கும் போது முசலி மக்கள் மத்தியில் வேதனையும் சிரிப்பும் தான் ஏற்படுகின்றது.
உண்மையில் பார்க்கும் போது இனிவரும்  காலங்களில் அவர் தஹஜ்ஜத் தொழுகையயை மேற்கொள்வாராயின் அவர் இந்த சமுத்திற்கும் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் செய்த துரோகத்தனத்திற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பது எமது பிரார்த்தனையாகும்.
முசலி பிரதேசத்தை பொறுத்தவரை இந்த  எம்பி என்பவர் சவாலுக்குரிய மனிதரே இல்லை. அரசியலாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாக இருநதாலும் சரி  அவர் ஒரு சவாலுக்குரியவர் அல்ல. முசலி பிரதேச மக்கள் நினைவில் வைக்குமளவு அவர் ஒரு செங்கல்லையும் நாட்டவில்லை.
கடந்த நாடாளுமன்ற  தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு சந்திக்கு சந்தியகா சென்று எனக்கு வாக்களிப்பதன்றால் நான் நிறுத்தியுள்ள ஏனைய இருவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மன்றாடி இந்த ஹூனைஸை எம்பியாக்கியதற்கு செய்யும் கைமாறா இலத்திரனியல் ஊடகத்திற்கு சென்று தன்னை தூக்கிவிட்ட தலைவiனை  தவறாக பேசியது என்று நாம் அவரை நோக்கி கேட்க விரும்புகின்றோம்.
முசலி மக்கள் ஒருபோதும் பிரதேச வாதத்திற்கோ, காட்டிக் கொடுப்புகளுக்கோ ,துரோகத்தனங்களுக்கோ ஒரு போதும் உடந்தையாக இருந்தவர்கள் அல்லர் என்பதை இங்கு நாம் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
தலைவர்  ரிசாத் பதியுதீனுக்கும் எமது அ.இ.ம.கா கட்சிக்கும் அன்று தொடக்கம் இன்று வரை பூரண ஒத்துழைப்பு வழங்கி வரும் முசலி பிரதேசத்து மக்கள் இனிவரும் காலங்களிலும் அவ்வாறே தமது ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு முதல் முதலில் முசலிப் பிரதேசத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கி முசலிப்பிரதேசத்திற்கும் அங்கு வாழும் மக்களினது கௌரவ இருப்பையும் பெற்றுக் கொடுத்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு என்றும் முசலி பிரதேச மக்கள் நன்றியுடனே இருப்பார்கள் என்றும் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post