Breaking
Wed. Dec 25th, 2024
இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்..
இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Post