டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண்ணின் பிரகாரம் 177 நாடுகளில் இலங்கை 85 ஆம் இடத்திலுள்ளது.
கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்திலிருந்தது.
இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் 38 புள்ளிகளைப் பெற்று 85 ஆவது இடத்திலுள்ளன.
92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளதுடன், ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முதலிடத்தில் திகழ்கின்றன.
50 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், இலங்கையில் அரச துறையின் ஊழல்கள் குறித்து பாரிய பிரச்சினை நிலவுவதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை விவகாரங்களுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ரணுக்கே குறிப்பிட்டுள்ளார்.