Breaking
Thu. Dec 26th, 2024
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்றையில் நேற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பலவும் இதன் போது கூடியிருந்தன.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன வருவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே.
நாங்கம் மிகவும் சவாலான தேர்தலுக்கு முகங்கொடுத்தாலும் வெற்றி நிச்சயமே என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இவ்வாறு கருத்துரைத்தார்.
நான் தனியாகவே சவாலை ஏற்று வெளியே வந்தேன்.
எனினும் எனக்கு நடந்த விடயங்கள் என்னவென்பது உங்களுக்குத் தெரியும்,
சிறையில் இருந்து வெளியில் வந்து சிறு பாதை அமைத்தேன்.
அது தற்போது அதிவேக பாதையாக மாறியுள்ளது.
அதற்காக நான் பெறுமைப்படுகின்றேன்.
எங்களது இந்த பயணம் ஊழல் மோசடி அரசாங்கத்திற்கு எதிரானதாக இருக்கும் என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
நாங்கள் எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒன்றிணைந்துள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கத சுதந்திர கட்சியும் ஒருநாளும் இணைந்து அரசியில் நடவடிக்கைகளை முன்னெடுத்தது இல்லை.
எனினும் தற்போது ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்துள்ளோம் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர் கட்;சிகளின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
புலி கதைகளை சொல்லியே அரசாங்கம் காலத்தை கடத்த முனைகின்றது.
எங்களுக்கு அது தேவையில்லை.
எங்களுக்கு புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தமே வேண்டும் என குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,
நாங்கள் தெளிவாக சொல்கின்றோம்.
எங்கள் போராட்டம் ஜனநாயகத்திற்கான போராட்டம்.
ஊழல் மோசடிக்கு எதிராக நல்லாட்சிக்கான போராட்டம், சர்வதேசத்தை யுத்தகளமாக்குவதற்கு பதிலாக சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான போராட்டம்.
அத்துடன் பழிவாக்களுக்கு எதிரான நல்லாட்சிக்கான போராட்டம் என குறிப்பிட்டார்.

Related Post