அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன.
எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.