Breaking
Tue. Dec 24th, 2024

முன்னால் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரனைகள் தோற்கடிக்கப்படும் 19 ஆவது திருத்தங்கள் 20,21 ஆவது திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்பது நாடாளுமன்றில் தோற்கடிக்கப்படும் என முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் இன்று (05) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்

இவரினால் கொண்டு வரப்படும் விகிதாசார தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படும் குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வீதமானவற்றை 12.5 வீதமாக்கினால் சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல சிறிய கட்சிகளுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் .

கடந்த காலங்களில் 19 ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழு உருவாக்கம் திருத்தம் தொடர்பில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்ரமசிங்க,சஜீத் பிரேமதாச,தமிழ் முஸ்லிம் சிறுபான்மை  கட்சிகளின் தலைவர்கள் உட்பட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
பௌத்த சமூகத்துடன் சிறுபான்மை சமூகம் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடியவாறு இது ஏற்றுக்கொள்ளப்பட்டது .

இதனை வெட்டுப் புள்ளி தொடர்பாக அன்றைய ஜே.ஆர் ஜெமவர்தனவிடம் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 1988 ல் இது தொடர்பில் விரிவான விளக்கங்களுடன் வெற்றி பெற்றது.

 இதனை தற்போது பிரேரனையாக கொண்டு வருவதாக இருந்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் இது நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. இவ்வாறான வெட்டுப் புள்ளி முறைமையினால் மக்கள் விடுதலை முன்னணிக்கு கூட எதிர் வரும் பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாமல் போய் விடும் .

12.5 வீதமான வெட்டுப் புள்ளி அபாயகரமானது இதனை நிராகரிப்போம்.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி இந்த நாட்டில் இல்லாமல் ஆக்கப்படுவதற்கு இனவாதத்தையும் இனத்துவேசத்தையும் கக்கி வெட்டுப் புள்ளி மூலமாக சிறுபான்மை சமூகத்தை நாடாளுமன்றில் அடக்கி ஒடுக்க நினைக்கின்ற விஜேதாச ராஜபக்ச போன்றவர்களின் இரு பிரேரனைகளும் தோற்கடிக்கப்படும்.

இந்தப் பிரேரனையை தமிழ் தேசிய கூட்டமைப்பு,மலையக மக்கள் முன்னணி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் இந்த பிரேரனைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

Related Post