Breaking
Sat. Dec 28th, 2024

சிவில் மற்றும் வெகுசன அமைப்புக்கள் பல பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து வருகின்றன.

எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் பலரை அரசாங்கம் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி தக்க வைத்துக் கொள்ளும் பலவீனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த தோற்க வேண்டுமென்ற நோக்கில் பலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

அண்மையில் கட்சி காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று நடத்திய போது பாதுகாப்பு படையினர் புகுந்து இடையூறு விளைவித்தனர்.

கட்சிக் காரியாலயத்தை கடுமையாக சோதனையிட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து திருப்தி அடைய முடியாது.

சிறுவர் துஸ்பிரயோகம்,  படுகொலைகள், போதைப் பொருள் கடத்தல்கள் என குற்றச் செயல்களின் எண்ணிக்கை நீண்டு செல்கின்றது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள், எதனோல் கடத்தல்காரர்களை கைது செய்யாத பாதுகாப்பு தரப்பு எமது கட்சிக் காரியாலயத்தை சோதனையிட தீவிரம் காட்டுகின்றது.

ஆரம்பத்தில் எம்மை விமர்சனம் செய்த பலர் இன்று எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post