Breaking
Mon. Jan 13th, 2025

வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் 7வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (12) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.ரகுமான், எம்.யூ.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வில் அணிநடை வகுப்பு, உடற்பயிற்சிக் கண்காட்சி, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் மர்வா இல்லம் 322 புள்ளிகளையும், ஹிரா இல்லம் 298 புள்ளிகளையும், சபா இல்லம் 247 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.

வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் அதிதிகளால் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு, 2013 ம் ஆண்டு முதல் இதுவரை காலமும் பாடசாலையின் கல்வி மற்றும் புறக்கீர்த்திய செயற்பாடுகளுக்கு பக்கபலமாக செயல்பட்ட பாடசாலை அதிபர் எம்.எஸ்.சுபைதீன் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பாடசாலைக்குச் செய்த பல்வேறு பங்களிப்புகளுக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இறுதிநாள் நிகழ்வுகளை யாசீன் மற்றும் பஸாகிர் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Post