Breaking
Fri. Jan 10th, 2025

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்தார்.

 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்;-

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட கிழக்கில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததால் மக்களின் அங்கிகாரத்தைப் பெற்று அம்மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயணிக்கின்றது.
அதே போன்று தேர்தலுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் தென் மற்றும் மேல் மாகாண சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து அம்மக்களுக்கு சேவை செய்யவே இத்தேர்தலில் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post