Breaking
Fri. Jan 3rd, 2025

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியி டும் மஹிந்த ராஜபக்­வுக்கு பொதுபல சேனா ஆதரவு வழங் குமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளமை எவருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. பொதுபல சேனா அரசின் வளர்ப்புப் பிள்ளை என்பதால் அதனால் இத்தகைய தொரு தீர்மானத்தையே எடுக்க முடியும்.

பொதுபல சேனா தீவிரமான சிங்கள பெளத்தவாதத்தை தன்னகத்தே கொண்டு செயற் பட்டு வருகின்றது. அதன் செய லாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக் கும் பூரணமான சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றார். அவரை எதிர்த்து எவருமே கேள்வி எழுப்பமுடியாததொரு நிலை யும் காணப்படுகின்றது. சிறு பான்மை மக்களுக்கு உரிமை களை வழங்குவதைக் கடுமை யாக எதிர்க்கும் பொதுபலசேனா இனவெறியைக் கிளப்பும் பரப்பு ரைகளை பெரும்பான்மையின மக்களின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றது. அண்மைக்கால மாக இதன் இனவெறிப் பார்வை முஸ்லிம் மக்களின் பக்கம் திரும்பி நிற்பதைக் காணமுடி கின்றது.

முஸ்லிம் மக்கள் வட, கிழக் கில் மட்டுமல்லாது, தெற்கிலும் பரந்து வாழ்கின்றனர். பெரு மளவு பள்ளிவாசல்கள் அங்கு காணப்படுவதுடன் அவர் களுக்குச் சொந்தமான வர்த் தக நிலையங்களும் ஏராளமாக உள்ளன. இதனால் சிங்கள, முஸ்லிம் மக்கள் காலம் கால மாக அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், பொது பல சேனாவின் தூண்டு தலில் இடம்பெறும் முஸ்லிம் மக்களுக்கெதிரான சம்பவங் கள் அந்த மக்களிடையே அச்ச நிலையைத் தோற்றுவித்துள் ளது. பல பள்ளிவாசல்கள் தாக் குதலுக்கு உள்ளாக்கப்பட்டது டன் அவைகளில் சில முன் பிருந்த இடங்களிலிருந்து அகற் றப்பட்டுள்ளன. வர்த்தக நிலை யங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள், பெரும்பான்மை மக்கள் வாழும் இடங்களில் வர்த் தக நடவடிக்கைகளைத் தொடர முடியாத அளவுக்கு இடையூறு கள் விளைவிக்கப்பட்டன. இதன் உச்சக் கட்டமாகவே அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைச் சம்பவங்கள் இடம் பெற்றன. இத்தகைய சம்பவங் கள் இன்னமும் தொடரவே செய்கின்றன.

வன்முறையைத் தூண்டும் விதமாக கலகொட அத்தே ஞான சார தேரர் உட்பட பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்கள் கூட்டங்களில் உரையாற்றிய போதிலும் அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. பொலிஸார் அவர் களுக்கு ஆதரவாகச் செயற்ப டுவதுடன் குற்றம் புரிபவர்க ளைக் காப்பாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ வுக்கு பொதுபல சேனா வழங்கப் போகும் ஆதரவு சிறுபான்மை யின மக்களுக்கு எதிராகவே அமையப்போகின்றது. இதை முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித் துவம் செய்யும் கட்சிகள் உணர்ந்து கொண்ட போதிலும் தமது மக்களின் எதிர்காலம் தொடர் பான சிந்தனை அற்றனவா கவே காணப்படுகின்றன. தற் போது ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான கட்சி, அமைச்சர் ரிஷாத் பதியு தீன் தலைமையிலான கட்சி என்பன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கு ஆதரவு என்பது தொடர்பான ஒரு தீர்க்க மான முடிவை எடுக்க வேண் டிய நிலையிலுள்ளன.

அதாவுல்லா ஜனாதிபதிக்கே தமது ஆதரவு எனக் கூறியுள்ள போதிலும் இதையயாரு இறுதி யான முடிவென இப்போது கொள்ள முடியாது. ஏனென்றால் இறுதி வேளையில் மக்களின் விருப் பத்துக்கு ஏற்ப இதில் மாற்றங் கள் ஏற்படலாம். அனேகமான முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் பொதுபல சேனா ஜனா திபதிக்கு ஆதரவு வழங்குவதை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
தற்போதுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனப் போக்கை பொதுபல சேனா கைவிடு மெனவும் எதிர்பார்க்க முடி யாது. சிலவேளை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தர் வெற்றி பெற்றுவிட்டால் பொதுபல சேனா வின் நடவடிக்கைகள் அதிகரிக் கவே செய்யும். இதனைக் கட்டுப் படுத்துவதற்கு ஜனாதிபதி உட்பட எவருமே முன்வரமாட்டார்கள்.

எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன கூட தாம் சிங்கள, பெளத்தத்தைக் காப்பாற்றப் போவதாகவே கூட் டங்களில் தெரிவித்து வருகின் றார். சிலவேளை வாக்குகளைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால், பெரும் பான்மையின மக்களின் மனங் களில் உள்ள சிறுபான்மையின ருக்கு எதிரான எண்ணங் களை எவராலும் இலகுவாகத் துடைத்தெறிந்துவிட முடியாது.
இந்த நிலையில் பொதுபல சேனாவுடன் இணைந்து தேர்த லின்போது செயற்பட முடியுமா? என்பதை முஸ்லிம் மக்கள் தீர் மானித்துக்கொள்ள வேண்டும். என்னதான் நடந்தாலும் அவர் கள் இந்த மண்ணில்தான் தமது வாழ்நாளைக் கழிக்கப் போகின்றனர். முடிவெடுக்க வேண்டிய உரிமையும் அவர் களிடம்தான் உள்ளது.

Related Post