சமீபத்திய வரலாற்றில் இலங்கையின் காலணி மற்றும் தோல் துறைக்கான ஏற்றுமதியில் மிக உயர்ந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
எங்கள் காலணி மற்றும் தோல் ஏற்றுமதி ஒரு வலுவான வளர்ச்சி போக்கை காணக்கூடியதாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு இத் துறைக்கான ஏற்றுமதி 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு 51 மில்லியனாக காணப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க 63% சதவீத அதிகரிப்பினை பதிவு செய்தது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மூன்று நாள் நிகழ்வு கொண்ட 6 வது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சியினை வெள்ளிக்கிழமை2014-02-07 ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ; அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் சிறிமாவோ பண்டாநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் ஆரம்பமான இக்கண்காட்சியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்