சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.
1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது.
சிவில் அரசியல் உரிமைகள்
· சிந்தனை செய்தல், மனட்சாட்சியைப் பின்பற்றுதல் தங்களது மதங்களைப் பின்பற்றுதல்
· கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம்
· அமைதியாக ஒன்று கூடுதலும், தொழிற் சங்கங்களை ஆரம்பித்தல்
· அரசியலில் பங்கேற்றலும், வாக்குப் போடுவதற்கும், வாக்குப் பெறுவதற்குமான உரிமை
· வாழ்வதற்குள்ள உரிமைகள் பாதுகாக்கப்படல்
· எவரும் சி;த்திரவதைக்கோ அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற இழிவான நடத்தைக்கோ அல்லது தண்டனைக்கோ ஆளாகக் கூடாது.
· அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்படல் ஆகாது
· எவரையும் தான்தோன்றித் தனமாக கைது செய்யவோ தடுத்து வைத்தலோ கூடாது
· குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைக்கப்படும் ஒருவர் நீதிமன்றம் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும்
· நடமாடும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்க வேண்டும்
· சட்டத்திற்கு முன்னால் சகலரும் சமம்
சமுக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள்
· போதுமான வாழ்க்கை வசதியிருத்தல் (உணவு, உடை, உறையுள் உள்ளிட்ட)
· தொழில் செய்யும் உரிமையும் அதனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும்
· சமமனான வேலைக்கு சமனான சம்பளம்
· பாதுகாப்பானதும், சுகாதாரமுமான வேலை செய்யும் உரிமை
· சமுக பாதுகாப்பிற்கான உதவி
· தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான விசேட பாதுகாப்பு ஒழுங்கு
· பட்டினியிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை உரிமை
· கல்வி பெறுவதற்கான உரிமை
· சகலரும் கலாசார வாழ்வில் பங்கு கொள்வதற்கும், மனித உரிமைகள் சட்டத்தை அமுல்படுத்தல் ஒவ்வொரு தேசத்தினுடைய பொறுப்பாகும்.
· மனித உரிமை விடயங்களை அடிப்படை உரிமைக்குள் கொண்டு வந்து சட்ட அங்கீகாரத்தை தமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் முதற் பொறுப்பாகும்.
நாடுகளுக்கிடையிலான யுத்தம், உள்நாட்டு மோதல்கள், வர்த்தகப் போராட்டங்கள் போன்றவைகள் நிகழும் சந்தர்பத்திலேயே அனேகமான மனித உரிமைகள் மீறப்படுகின்றன.
எனவே தனிப்பட்ட அளவில் எமக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ அதே போல பிறருடைய உரிமைகளையும் நாம் மதிக்க வேண்டும். இதற்கு சட்டங்களினால் மாத்திரம் பரிகாரம் காண முடியாது. அனைவரினது மனப்பாங்கிலும் மாற்றம் வந்தால் மாத்திமே உரிமைகளை பாதுகாக்க முடியும்.