தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்ற முடிவை அவர் இன்று புதன்கிழமை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் தன்னைக் கவர்ந்துள்ளதாக ஏற்கனவே வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.